analyticstracking Dooringtalkies | Daily Hot Celebrity News Gossips and Tamil Cinema Latest News
Facebook Popup Widget
நடிகர் சந்தானம் இப்போது தான் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தின் மூலம் கதாநாயகனாக உயர்ந்திருக்கிறார். அந்தப் படம் விரைவில் வெளியாக இருக்கிறது. அதற்கு முன்னதாகவே இனி காமெடியனாக நடிப்பதில்லை, இனி ஹீரோவாக மட்டுமே நடிப்பது என்று முடிவு செய்துவிட்டார். அதுமட்டுமல்ல, தன் படக்கம்பெனி மூலம் தொடர்ந்து படங்களை தயாரிப்பது என்ற முடிவுக்கும் வந்திருக்கிறார். ஆக..காமெடியன் என்ற ஸ்டேஜிலிருந்து ஹீரோ, தயாரிப்பாளர் என்ற ஸ்டேஜுக்கு உயர்ந்திருக்கிறார்.

இப்படிப்பட்ட சூழலில் சந்தானம் பற்றி படத்துறையில் பரபரப்பான தகவல் ஒன்று அடிபடுகிறது. மனைவியைப் பிரிந்து சந்தானம் தனியாக வசிக்கிறார் என்பதே அந்த தகவல். சினிமாவில் பிரபலமாவதற்கு முன்பே சந்தானம் திருமணமானவர். இரண்டு குழந்தைகளும் உண்டு. சென்னையின் புறநகரான பொழிச்சலூரில் குடும்பத்துடன் வசித்து வந்த சந்தானம், மனைவியுடன் பிரச்சனை ஏற்பட்டதால் கடந்த சில வாரங்களாக சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது அலுவலகத்திலேயே தங்கி வருகிறாராம். அதுமட்டுமல்ல, அதே பகுதியில் ஒரு ப்ளாட்டை வாங்கியிருக்கும் சந்தானம் விரைவில் அந்த ப்ளாட்டில் தனியாக குடியேற இருக்கிறாராம்.

More Articles..
இரண்டு வருட இடைவெளி பிறகு, தெனாலிராமன் என்ற படத்தில் அவர் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் பாடல் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது.இவ்விழாவில் வடிவேலு, படத்தின் நாயகி மீனாட்சி தீக்சித், இசையமைப்பாளர் இமான், படத்தின் தயாரிப்பாளர்கள் ஏஜிஎஸ் சகோதரர்கள் மற்றும் படக்குழுவினர்கள் கலந்துக் கொண்டனர். இம்மாதம் 18ம், திகதி உலகம் முழுவதும் திரையிடப்பட உள்ளது. இந்த படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கும் வடிவேலுக்கு ஜோடியாக மீனாட்சி தீக்சித் நடிக்கிறார். இப்படத்திற்கு இசை இமானும், ஒளிப்பதிவை ராமநாத் செட்டியும் கவனிக்கின்றனர். கதை, திரைக்கதை எழுதி யுவராஜ் தயாளன் இயக்குகிறார்.

More Articles..
சினிமாவில் நுழைந்த குறுகிய காலத்தில் நான்குப் படங்களில் அக்சய் குமாரின் ஜோடி சோனாக்‌சி சின்கா. நான்காவது படம், நம்மூர் முருகதாஸின் ஹாலிடே. துப்பாக்கி படத்தின் இந்தித் தழுவல். சும்மாச் சும்மா அவர்கூடவே ஜோடி போடறீங்களே என்று கேட்டதற்கு சோனாக்ஷி சில விளக்கங்கள் தந்துள்ளார். அதில் ஒன்று தான், மக்கள் விருப்பறாங்க.

ஒரு ஜோடி மக்களுக்குப் பிடித்தது என்றால் மீண்டும் மீண்டும் அந்த ஜோடியை திரையில் பார்க்க மக்கள் விரும்புகிறார்கள். நாங்கள் அதிக படங்களில் இணைந்து நடித்ததற்கு இது தான் முக்கிய காரணம்.

சோனாக்‌சி சொல்லும் இன்னொரு காரணம், அவரும், அக்சயும் நேரம் தவறாதவர்கள். தொழிலில் ரொம்ப சின்சியர். அதனால் எங்களை வைத்து படம் தயாரிப்பவர்கள் எப்போதும் மகிழ்ச்சியாகவே இருப்பார்கள். இதுவும் காரணமாக இருக்கலாம் என கூறியுள்ளார்.

ஹாலிடே தவிர்த்து இரு படங்களில் சோனாக்‌சி நடித்து வருகிறார். அதில் ஒன்று பிரபுதேவா இயக்கும் ஆக்சன் ஜாக்சன். பிரபுதேவா இயக்கிய முதல் படம் வான்டடில் மட்டும் வேறு ஹீரோயின். அடுத்து இயக்கிய ரவுடி ரத்தோர், ரா...ராஜ்குமார் இரண்டிலும் சோனாக்‌சிதான் நாயகி. நான்காவது படம் ஆக்சன் ஜாக்சனிலும் நாயகி சோனாக்‌சிதான்.

More Articles..
அடுத்த வீட்டில் உள்ளவர்களுடன் கூட அறிமுகம் வைத்துக் கொள்ள முடியாத இந்த அவசர உலகத்தில். தொழில்நுட்ப சாதனங்களின் உதவியால் அண்டார்டிகாவில் இருப்பவர்களுடன் சாட் செய்ய முடிகிறது.

இந்திய பெண் ஆஷாவும், அமெரிக்க இளைஞன் ஹேங்க்-ம் ங்கள் மூலம் நெருக்கமாகிறார்கள். இந்த புதிய உறவு அவர்களிடையே ஏற்படுத்தும் மாற்றங்களைப் பற்றிய படம் "Hank and ஆஷா" .

கதையில் வரும் ஆஷா Prague -ல் படித்து வரும் மாணவி. இந்த கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் மஹிரா ஹக்கர். இதற்கு முன் பல ஆங்கிலப் படங்களில் நடித்துள்ளார். கொல்கத்தா பூர்வீகம். பல சர்வதேச விருதுகள் வாங்கியிருக்கும் இப்படம் அமெரிக்காவில் வெளியாகிறது. அமெரிக்கா என்றால் ஒட்டு மொத்த வட அமெரிக்காவில் அல்ல. நியூயார்க் சிட்டியில் மட்டும். இன்று 18 ஆம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் கலிஃபோர்னியா. அதையடுத்து இன்னொரு நாளில் இன்னொரு மாகாணம்.

More Articles..
1916முதல் 1932வரை தென் இந்தியாவில் 108 மௌனபடங்கள் வெளியாகின. பெரும்பாலும் பக்திபுராண படங்களே அதிகம். மௌன பட காலத்தில் பிரபலமான நடிகர்கள் பாட்லிங் மணி, ஸ்டான்ட் ராஜூ, சர்கார் பாபு போன்றோர்.பெண்கள் நடிக்க வராத அந்நாளில் மரைன்ஹில் என்ற ஆங்கிலோ இந்திய பெண் நடித்து வந்தார். சினிமாவில் அவர் பெயர் லிலோச்சனா. அவருக்கு அப்போது நடிகர்களை விட அதிக சம்பளம். அப்போது சினிமா இடையே நாடகங்கள், இசை கச்சேரி, கூத்துக்களையும் நடத்துவர். ஆங்கில படங்களுக்கு இசை தட்டுகளை இசைத்தும் படம் காட்டுவர். சினிமா இடையே நாட்டியமாடிய நம்பியாரி என்ற பெண் பிறகு பிரபலமான கவர்ச்சி நடிகை ஆனார்.

வந்துவிடும் மௌன படங்களில் பிரபலமான நாடக நடிகர்கள் வர மறுத்தனர் காரணம் அப்படங்களில் அவர்களால் பாடி பேசி நடிக்க முடியாதே என்பதால். அநியாய பணம் தருகிறோம் என்று ஆசை வார்த்தை சொன்னபோதும் யாருமே நடிக்க வரவில்லை. அதன் இன்னொரு காரணம் காமெரா தங்கள் இளமையை கெடுத்து நோய் கொடுத்து விடும், அதன் வெளிச்சம் தோல் சுருங்கி முதுமை சீக்கிரமே வந்துவிடும் என்றும் நம்பினார்.

1920ல் முதன்முதலாக பம்பாய், சென்னை,கல்கத்தா ரங்கூன் நகரங்களில் சென்சார் அலுவலகங்கள் திறக்கப்பட்டன.

எந்த படத்தில் நடித்தாலும் யாருடன் நடித்தாலும், தன் குரலில் பாடும் ஒரு வாய்ப்பு இருக்கும் என்றால் தான் நடிக்கவே சம்மதிப்பார் எஸ்.வரலட்சுமி. கடைசியாய் நடித்த குணா வரை அந்த கொள்கையை கடை பிடித்தார் எஸ்.வி.

19வயதில் நடிக்க தொடங்கி, 36 வயது வரை 7 மொழிகளில் சுமார் 450 படங்கள் நடித்து முடித்தார். குள்ளமான உருவம், கருப்பு நிறம் என குறைகள் இருந்தாலும், சில்கின் காந்த கண்களே ரசிகர்கள் அனைவரையும் சுண்டி இழுத்தது. கவர்ச்சி, குணசித்திரம், அதிரடி ஆக்சன் என பலதரப்பட்ட பாத்திரங்களை தேர்வு செய்து நடித்தார். இந்தியாவின் உச்ச நடிகைகள் கூட பெறாத புகழை பெற்றார். இந்தியாவின் மர்லின் மன்றோ என எல்லா மொழியிலும் பத்திரிகைகளால் போற்றப்பட்டார்.

ஓடவே ஓடாது என அடித்து சொல்லப்பட்ட பல படங்கள், சில்க் ஸ்மிதா கவர்ச்சி காட்சிகளை இணைத்ததால் ஓட தொடங்கியது. சில்க் ஸ்மிதா டான்ஸ் இருந்தால்தான் படம் ஓடும் என்று தயாரிப்பாளர்கள் போட்டி போட்டு ஒப்பந்தம் செய்யும் அளவுக்கு அவருக்கு ரசிகர் பட்டாளம் இருந்தது. கமலுடன் ஆடிய நேத்து ராத்திரியம்மா பாடல் இன்றும் இளைஞர்களுக்கு கிளு கிளுப்பூட்டக் கூடியது. இரவுகளை கூட ஈரமாக்க செய்யும் சரச கலையில் சாதனை புரிந்த கனவு கன்னியாக 17 ஆண்டுகள் வாழ்ந்தார், நடித்தார்.

தொடர்ந்த நடிப்பு, நிறைய பணம், நம்புவதற்கு ஆள் இல்லாத தனிமை, நம்பிய ஒரு கயவனின் துரோகம், காதல் தோல்வி, போதை பழக்கத்தின் தள்ளாட்டம், சொந்த படம் எடுக்க முயற்ச்சித்து விரயமான பணம், கடன் தொல்லைகள், அப்பாப்பா சுற்றிலும் முதலைகளின் தொல்லைகள், எல்லா பிரச்சினைகளுக்கும் மரணம் ஒன்றே வழி என உறுதியாக, இறுதியாக நம்பினார் சில்க்.

அந்த நாளும் வந்தது,1996 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23 ஆம் தேதி தன்னுடைய வீட்டிலேயே தூக்குப் போட்டு இறந்தார். திரையுலகம் மட்டுமல்ல, ஒட்டு மொத்த தென்னிந்திய மக்களும், நம்ப முடியாது தவித்தனர். எங்கும் அதுவே பேச்சாகவே இருந்தது. சில்கின் திரை வாழ்க்கை சொர்க்கபுரியாக இருந்தாலும், நடிகையாக அவரின் நிஜ வாழ்க்கை எத்தனை சோகமானது என்பதை அவர் தற்கொலை செய்து கொண்டதற்கு அடுத்த நாள், ராயப்பேட்டை மருத்துவமனை பிணக் கிடங்கில் அழக் கூட யாருமற்ற நிலையில் அவர் சடலம் அனாதையாக கிடந்தபோதுதான் தெரிந்து கொள்ள முடிந்தது.

அடுத்த பக்கம் தொடரவும் ..
தமிழ் திரைப்பட உலகின் தந்தை என்று கே சுப்பிரமணியம் அவர்களை சொல்லலாம். ஊமை படங்கள், பேசும் படங்கள் என இரு கால கட்டங்களில் பணியாற்றிய மேதை. பெரியார் சமூக சீர்திருத்தம் பேசிய காலத்திற்கு முன்பே சினிமாவில் பெரும் புரட்சி பேசிய சினிமா பெரியார் எனலாம். இவர் படங்கள் சுதந்திரம், பெண் விடுதலை, ஆதிக்க ஜாதியினரின் கொடுமைகள், குழந்தை திருமணம் என பல அவலங்களை சாடி 1930-40 களிலேயே படங்கள் எடுத்தவர்.

நிறைய நடிகர், நடிகைகளை அறிமுகப்படுத்தியவர். பாகவதர், எஸ்.டி .சுப்புலட்சுமி, எம்.எஸ்.சுப்புலட்சுமி, டி.ஆர்.ராஜகுமாரி, எம். சரோஜா, பி.சரோஜா, சரோஜாதேவி என ஒரு நீண்ட வரிசையே போடலாம் அவ்வளவு பேரை அறிமுகம் செய்து வைத்து இருக்கிறார். இத்தனை பெரிய சினிமா ஜாம்பவானான கே.சுப்பிரமணியம் தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில், பிரபல வழக்கறிஞராக இருந்த கிருஷ்ணசுவாமி ஐயருக்குப் மகனாக பிறந்தார். தந்தையைப் போலவே சட்டம் படித்த இவர், கும்பகோணத்தில் வழக்கறிஞராக பணியாற்றினார். பின்னர், திரைப்படத் துறையின் மீதுள்ள ஆசையால் சென்னைக்கு வந்தார்.

தமிழ்த் திரைப்பட முன்னோடி இயக்குனரான ராஜா சாண்டோவிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். ராஜா சாண்டோவிடம் இணைந்து பேயும் பெண்ணும் 1930, அநாதைப்பெண் 1930, இராஜேஸ்வரி 1931, உஷாசுந்தரி 1931 ஆகிய ஊமை படங்களில் பணியாற்றினார். பிறகு இராம அழகப்பச் செட்டியாருடன் இணைந்து மீனாட்சி சினிட்டோன் என்ற திரைப்பட நிறுவனத்தை ஆரம்பித்தார். இவர் ஆரம்பித்த ஸ்டுடியோ தான் பின்னர் எஸ்.எஸ்.

வாசன் அவர்களால் வாங்கப்பட்டு ஜெமினி ஸ்டுடியோ என்றானது. பவளக்கொடி என்ற தனது முதலாவது திரைப்படத்தைத் தயாரித்தார். இந்த திரைப்படத்திலேயே தியாகராஜ பாகவதர், எஸ். டி. சுப்புலட்சுமி ஆகியோர் அறிமுகமானார்கள். படம் வரலாறு காணாத வெற்றி. இப்பட கதாநாயகி சுப்புலட்சுமியை பின்னர் கே. சுப்பிரமணியம் ரெண்டாவது மணந்து கொண்டார். கே.சுப்பிரமணியம் அவர்களின் முதல் மனைவி ருக்மிணி அவர்கள். இவர் தனது கணவரின் படங்களுக்கு இசை அமைத்து இருக்கிறார். இவரே இந்திய சினிமாவின் முதல் பெண் இசை அமைப்பாளர்.

அடுத்த பக்கம் தொடரவும்..
ஃபேன்டஸி தாண்டி, மற்றப் படங்களிலும் கூட நகைச்சுவைக்காக இந்த உத்தி தொடர்ந்து பயன்படுத்தப்படுவதைப் பார்த்திருப்பீர்கள். பாடல் நடனங்களிலும் இந்த உத்தி அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. ஆனால் எப்போதெல்லாம் இது திரையில் நிகழ்த்தப்படுகிறதோ அப்போதெல்லாம் ஒரு மேஜிக் நிகழ்ச்சியைப் பார்ப்பதைப் போன்ற உணர்வை நாம் அடைகிறோம். உண்மையில் மேஜிக் நிகழ்ச்சிகளில் இருந்துதான் இந்தத் தொழில்நுட்பம் சினிமாவுக்கே வந்தது.

1895யில் பாரீஸ் நகரில் லூமியர் சகோதரர்கள் தாங்கள் எடுத்த உலகின் முதல் திரைப்படத்தைப் பொதுமக்களுக்குத் திரையிட்டபோது, அதில் பார்வையாளராக இருந்த ஒருவர் ஃபிரான்ஸ் நாட்டின் பிரபல தொழில்முறை மேஜிக் நிபுணரான ஜார்ஜஸ் மெலியஸ் (Georges Melies). அவருக்கு சினிமாவின்மேல் கண்டதும் காதல் ஏற்பட்டுவிட்டது. சலனப்பட கேமரா எனும் புதிய கருவியை அவர் ஒரு நவீன மந்திரக்கோலாகத்தான் பார்த்தார்.

அவர் சினிமாவைக் கைப்பிடித்தது ஒரு பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியது. தந்திரக் காட்சிகளை முதன்முதலில் சினிமாவில் சோதித்துப் பார்த்து, அந்த சோதனை ஓட்டத்திலேயே பல சாதனை வெற்றிகளைப் படைத்தார் ஜார்ஜஸ் மெலியஸ். சினிமா என்பது என்ன என்கிற தெளிவே பிறந்திராத ஆரம்ப காலகட்டத்தில், அவர் எப்படி இத்தனைப் பெரும் புதுமைகளைச் செய்தார் என்கிற வியப்பை வெளிப்படுத்தாத சினிமா வரலாற்றாசிரியர்களே இல்லை. அனைத்து வகை தந்திரக் காட்சிகளுக்கும் (விஷூவல் எஃபெக்ட்) பிதாமகரான அவர்தான் ‘ஸ்டாப் பிளாக்’ நுட்பத்தையும் உருவாக்கினார்.

மேடையில் நிகழ்த்தப்படும் மேஜிக் நிகழ்ச்சிகளில் எக்காலத்திலும் விரும்பப்படுகிற ஒன்று “மறையவைக்கும் தந்திரம்” (DISAPPEARING MAGIC TRICK). மேஜிக் நிபுணர் ஒரு பொருளையோ அல்லது ஒரு ஆளையோ பார்வையாளர்களின் கண்முன்னே மறையச் செய்து மீண்டும் தோற்றுவித்துக் கொண்டுவருவார். இந்த தந்திரம் எவரையும் உடனடியாகக் கவரக்கூடியது என்பது தொழில்முறை மேஜிக் கலைஞரான மெல்லியஸ்க்குத் தெரியும். ஆகவே அந்தத் தந்திரத்தை சினிமாவில் உருவாக்கிக் காட்ட விரும்பி, அவர் கண்டுபிடித்ததுதான் ஸ்டாப் டிரிக் (STOP TRICK) அல்லது ஸ்டாப் பிளாக் உத்தி.

அடுத்த பக்கம் தொடரவும் ...
Directors
தமிழ் திரைப்பட உலகின் தந்தை என்று கே சுப்பிரமணியம் அவர்களை சொல்லலாம். ஊமை படங்கள், பேசும் படங்கள் என இரு கால கட்டங்களில் பணியாற்றிய மேதை. பெரியார் சமூக சீர்திருத்தம் பேசிய காலத்திற்கு முன்பே சினிமாவில் பெரும் புரட்சி பேசிய சினிமா பெரியார் எனலாம். இவர் படங்கள் சுதந்திரம், பெண் விடுதலை, ஆதிக்க ஜாதியினரின் கொடுமைகள், குழந்தை திருமணம் என பல அவலங்களை சாடி 1930-40 களிலேயே படங்கள் எடுத்தவர்.
Producers
இந்திய சினிமா நூறாண்டு காணும் இந்த மகத்தான ஆண்டில் காலத்தால் மறக்கமுடியாத, இந்திய திரையுலக சிற்பிகளை இங்கு நினைவு கூறுகிறோம். இங்கு இப்போது குறிப்பிட போகும் நபர், இந்திய சினிமா உலகில் பெரும் புரட்சிகளை ஏற்படுத்திய இயக்குனர், தயாரிப்பாளர், இவர் மறைந்தாலும் இவர் வழி நின்று இன்னமும் இவரது நிறுவனம் 70 ஆண்டுகள் தாண்டியும் வெற்றி நடை போட்டு வருகிறது. ஆம் A.V.M என்ற நிறுவன பிதாமகரின் சாதனைகளையே இங்கு பட்டியலிடப்போகிறோம். மூன்றெழுத்து சினிமா பிரபலங்களின் முன்னோடி இவர் எனலாம்.
Music Composers
பேசும் படம், பேசா படம் இரண்டு காலகட்டத்திலும் பெரும் புகழ் பெற்ற ஒரே இந்திய சினிமா கலைஞர் ராஜா சாண்டோ அவர்கள் தான். சினிமா ராணி டி.பி. ராஜலட்சுமியுடன் ஜோடி சேர்ந்து ராஜேஸ்வரி படத்தில் நடித்தார். பேசா பட காலத்தில் நந்தனார் உள்ளிட்ட பல படங்களை இயக்கினார். பேசும் பட காலம் தொடங்கிய போது இவர் இயக்கிய முதல் படம் 1932ல் வெளியான பாரிஜாத புஸ்பாஹாரம் என்ற புராண படம். பின்னர் 1933ல் இம்பீரியல் கம்பெனி கோவலன் என்ற சரித்திரப் படத்தை ராஜா சாண்டோவின் இயக்கத்தில் தயாரித்தது. நரசிம்மராவ், கோவலனாக நடித்தார்.
Actors
இந்திய திரையுலகின் முதல் பெண் இயக்குனர், முதல் தயாரிப்பாளர் டி.பி.ராஜலஷ்மி. மௌன படங்கள் தொடங்கி பேசும் படங்கள் வரை 1929 முதல் 1950 வரை இவர் 23 திரைப்படங்களில் நடித்தவர். முதல் பேசும்படமான காளிதாசில் நடித்த கதாநாயகி. சினிமா ராணி என அழைக்கப்பட்டவர். 1936ல் மிஸ். கமலா என்ற திரைப்படத்தை இயக்கி சாதனை புரிந்தவர். கிட்டப்பா, தியாகராஜ பாகவதர் போன்ற பிரபலங்களுடன் நடித்து பெருமை பெற்றவர். 1931ல் குறத்தி பாட்டும் நடனமும் என்ற முதல் குறும்படத்தில் நடித்தவர். ராமாயணம்’ திரைப்படத்தில் சீதையாகவும் சூர்ப்பனகையாகவும் இரு வேடங்களில் நடித்த முதல் நடிகை.

Read More >